வந்தே மாதரம் பாடல் என்பது 19 ஆம் நூற்றாண்டின் கடைசுயில் பக்கிம் சந்திரர் என்பவரால் இயற்றப்பட்ட ஆனந்த மடம் நெடுங்கதையில் இணைக்கப்பட்ட பாடலாகும்.
அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் உருவான ஆரிய சமாஜம் உள்ளிட்ட சநாதன இயக்கங்கள் பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய சீர்திருத்த சனநாயக மாற்றங்களால் பார்ப்பனிய மேல்தட்டு வகுப்பின் ஆதிக்கம் ஆட்டம் காணத் தொடங்கியது. காலனிய கல்வியும் அதனால் உருவான படித்த சீர்திருத்தவாதிகளும் சாதியமைப்பிற்கு எதிராகப் பொதுத்தளத்திற்கு வந்ததன் எதிர்விளைவாக பழைய பார்ப்பன மேலாதிக்க சமூக அமைப்பைப் பாதுகாக்க உருவான சநாதன இயக்கங்களின் குரலாய் ஒலித்தவர் பக்கிம் சந்திரர். அடிப்படையில் ஆழமான முசுலீம் வெறுப்பையும் இனக்கொலையையும் தூண்டும் ஆனந்த மடத்தின் உள்ளீட்டை மறைத்து அதனை தேசியப் பாடலாக ஆக்க முயற்சித்தவர்கள் காங்கிரசிலிருந்த சநாதனிகள்.

இருந்தபோதிலும் வந்தே மாதரம் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே அன்று காங்கிரசு பயன்படுத்த ஏற்றுக்கொண்டது. ஆனாலும் விடுதலைப் பெற்ற இந்தியாவின் தேசியப் பாடலாக வந்தே மாதரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
கடந்த சனவரி மாதம் தேசிய மாண்புகள் சட்டத்தைத் திருத்திய ஒன்றிய பா.ஜ.க அரசு வந்தே மாதரம் பாடலையும் நாட்டுப் பண்ணோடு இணைத்தது. மேலும் நாட்டுப் பண்ணோடு வந்தே மாதரத்தின் 6 பத்திகளை முழுமையாகப் பாட வேண்டும் எனவும் மாற்றியுள்ளது.
கடந்த ஆட்சியில் திமுக அரசு இதனைப் பயன்படுத்தவில்லை எனினும் புதிய அரசு தமிழ்நாட்டின் மரபுக்கு எதிராக வந்தே மாதரம் பாடலை பதவேயேற்பு நிகழ்வில் ஒலித்து தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் தள்ளியிருக்கிறது.
இந்தத் தவறு இனி நிகழாது என்று புதிய அரசு உறுதியளித்திருக்கிறது. எனினும் அரசமைப்பின் 14 ,17 சமத்துவ விதிகளுக்கு எதிராக முசுலீம் வெறுப்பைத் தூண்டும் பக்கிம் சந்திரரின் உள்நோக்கத்தை மறைத்து அவர் இயற்றிய பாடலை மட்டும் தனியாக தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்வதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் பன்மைத்துவத்தையும் சமய சார்பின்மையையும் அழிக்கத் துடிக்கும் சநாதன சக்திகளின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது. ஒரு சிறுபான்மையினர் முதல்வராக தமிழ்நாட்டின் முதல்வராக பதவிநேற்றிருக்கும் இந்த வேளையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் வந்தே மாதரம் பாடலை தேசியப் பாடலாக அறிவித்துள்ள ஒன்றிய அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சமயசார்பின்மையின் அடையாளமாக விளங்கும் தமிழ்நாட்டின் சார்பாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் .
Kumaran

Leave a Reply