தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது !!⁉…

“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது “என்பது நாம் தமிழர் வசூல்ராஜாக்களின் புது மொழியாக இருக்கிறது.

நவீன விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில் உள்ளது இந்த திடீர்த்தோன்றிகளின் வசூல்வேட்டை.

வசூல் வேட்டையால் சீமான் மற்றும் சீமானின் தம்பிகள் இடையே நடக்கும் கடுமையான போட்டி… இந்த நீயா நானா போட்டி நேற்று இன்று நடப்பதல்ல..!!…
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த நாள் தொட்டுத் தொடர்கிறது…,,,

இதன் தொடர்ச்சியை சமீபத்தில் சாக்கடை என்று பலராலும் அறியப்பட்ட சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஒலிதம் (ஆடியோக்கள்) அனைவரும் கேட்டு வியந்தனர்.

ஈனர்கள் வாழும் கூடாரமாக மாறியுள்ளது இவர்களின் தமிழ்த் தேசிய கட்டமைப்பு என்பதைப் பார்க்கும் போது, மண்ணை நேசித்த மாவீரர்களின் வாரிசுகளாக எங்கள் ரத்தம் கொதிக்கிறது…..

பிணம் தின்னும் காக்கைக் கழுகைவிட மோசமான போலி தமிழ்தேசியவாதிகளுக்கு எல்லாம் – திராவிடத் தலைவர்களை பற்றி பேச என்ன அருகதை உள்ளது⁉. …

ஈழமறவர்களின் மனதில் அழியாச்சுடராக இருப்பது தமிழ்த் தேசியத்தின் தவப்புதல்வர்கள் அண்ணன் கொளத்தூர் மணி, ஐயா கோவை ராமகிருஷ்ணன், ஐயா ஆறுச்சாமி போன்றவர்கள் என்பதை சாக்கடைகளுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

“தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது; அடிமைத்தனத்தின் அமைதியை கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது; சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்தான்; அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிகொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்த தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்”_ என்கிறார் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்…..

எங்கள் மூச்சான மாவீரர்களின் முகவரிகளை நாம்தமிழரின் உள்ள ஒவ்வொரு வசூல் ராஜாக்களும் முகத்தில் ஒட்டி கொண்டு போலித் தமிழ்த் தேசியம் போர்த்திய பூனைகளாக வலம் வருவது மட்டும் இன்றி, நாளுக்கு நாள் இவர்களின் சொத்துப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது தவிர இவர்களால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவொரு பயனும் கிடையாது.

தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அண்ணனின் கட்டளைக்கு ஏற்ப சேரலாதன் மாஸ்டர் ஒரு இயக்குனரை ஈழத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்க, அதற்காக வன்னியரசு அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்தான் சீமான். சீமானைப் பரிந்துரை செய்தபோது அண்ணன் கொளத்தூர் மணியின் விசுவாசி என்றும் தம்பி என்றும் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரன் இதனை அண்ணன் கொளத்தூர் மணியிடம் உறுதி செய்த பிறகே, சீமானை ஈழம் வர சம்மதித்தார் என்பது வரலாறு.

அன்று சீமானுக்கு முகவரி கூட இல்லாது இருந்தது. திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணியின் முகமும் முகவரியும் சீமானை ஈழம் அழைத்து வந்தது என்பது கசப்பான உண்மை..!

அன்று உங்களுக்குத் திராவிட தலைவர்கள் இனித்தார்கள்; இன்று ஏனோ அவர்கள் கசக்கின்றனர்❓ தந்தை பெரியாரின் பேரனாக தன்னை அறிமுகப்படுத்திகொண்டவர்தான் சீமான் என்பதை தம்பிகள் மறக்கக் கூடாது.

சாக்கடை என்று பலராலும் அறியப்பட்டவர் நடத்தும் வசூல் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். வரலாற்றைத் தெரிந்து கொள்ள👇

ஈழ விடுதலையும் திராவிட இயக்கங்களின் பங்களிப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

👀 திமுகாவின் பங்கு

👀இந்தியாவில் பயிற்சி

👀பயிற்ச்சிக்கான
பொருளியல் தேவை

👀ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கான அரசின் நெருக்கடி

👀 இந்திய அமைதிப்படை அத்துமீறல்கள்

👀 திராவிட்த் தலைவர்களின் ஈழப் பயணம்

👀 கைது படலங்கள்

👀 இராஜீவ் கொலை

👀 கைது விசாரணை

நான் மேலே குறிப்பிட்ட விடயங்களை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தி புரிந்து கொண்டால் வரலாறுபுரியாதவர்களுக்கும் புரியும்.

ஒரு ஒப்பற்ற இனத்தின் வரலாற்றை இருள் அடிக்க செய்யும் முயற்சியில் வசூல் ராஜாக்கள் வேகமாக வளர்ந்து வருகிறார்கள்., இதை கைதட்டி வரவேற்க முட்டாள் கூட்டமும் உள்ளது என்பது வேதனையே.

1984 முதல் 2009 வரை, ஏன் அதற்குப் பின்னர் 2013லிலும் எங்கள் இனத்திற்காக ( மூன்று தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்குகள், ஒரு தடா வழக்கு, எண்ணிலா முறை 15 நாட்கள் சிறையடைப்பு) என பல முறை சிறை சென்ற அண்ணன் கொளத்தூர் மணியின் பெயரை உச்சரிப்பதற்கு உங்களுக்கு எந்த விதத்திலும் தகுதி இல்லை என்பதை நீங்கள் எப்போது உணரப் போகிறீர்கள்?
தாயின் இறப்பைக் கூட கண்ணால் காண முடியாமல் தடா வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஐயா கோவை ராமகிருஷ்ணன் தனது முதல் குழந்தையின் பிரசவத்தின் போதும் ஈழ மக்களுக்காக சிறையில் இருந்தார் என்பது வரலாறு.

சீமானும் சிறை சென்றார் மது அருந்தியதால் வரும் வீரத்தின் அடிப்படையில் அதிகப் பிரசங்கித் தனத்தால் மட்டுமே. அன்று கலைஞர் கருணாநிதி குடிகாரன் சீமானின் பேச்சைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் எங்களுக்கு இதுபோன்ற ஒரு மன உளைச்சல் வந்திருக்காது.

அப்பா வைகோ பாஜக கூட்டணியில் இருந்த போது – முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் ஊடாகப் புலிகளுக்குப் பாரிய அளவிலான உதவிகளை பெற்றுத் தந்திருந்தார். அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரும் எங்களுக்கான பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அப்பா வைகோ போன்றவர்களை இழிவுபடுத்துவதுதான் தமிழ்த்தேசியமா?….

இன்றும் மதுரைக்கு பக்கத்தில் மலை உச்சியில் பிரபாகரன் மெட்டு என்னும் ஊர் உயிர் வாழ்கிறதே? திமுக பொன் முத்துராலிங்கம், செஞ்சி ராமசந்திரன், புலமைப்பித்தன் போன்றவர்களின் பங்களிப்புகளை மறக்க முடியுமா?…

புலிகள் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்த போது 3rd பேட்ச் மிகவும் முக்கியமான ஒரு பயிற்சி வகுப்பாக இருந்தது. அன்று புலிகள் அந்த பயிற்சியில் தோற்று இருந்தால், புலிகளின் சுவடே இல்லாமல் போயிருக்கும் என்பதை திடீர் தோன்றிகளும், வசூல் ராஜாக்களும் புரிந்து கொள்ள இன்னும் காலம் தேவைப்படும்.

தமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண் புலியூர் மண்., தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி களமாக அன்று அறியப்பட்டது சேலம் மாவட்டம். இதற்கு முதுகெலும்பாக இருந்தவர் அண்ணன் கொளத்தூர் மணி, அவருக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலம், என்ற குறைந்த பட்ச வரலாறுகூட்த் தெரியாமல், தாங்கள் புலிகளின் வாரிசுகள் என்று – ஒரு கூட்டம் பொய் பேசித் திரிகிறார்கள். இவர்களிடம் இருந்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

புலிகளின் மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்ற போது, புலிகள் மிகவும் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருந்தனர். பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடிவுசெய்து பெரியார் திடலில் தான் முதல் முதலில் ஈழ கண்காட்சிகளை நடாத்தினார்கள். அவ்வாறான கண்காட்சிகளைத் தொடர்ந்து ஐயா கோவைராமகிருஷ்ணன், ஐயா ஆறுச்சாமி ஆகியோரே. இதற்கு உறுதுணையாக இருந்ததும் திமுக, திகாவினர்தான்.

அன்று புலிகளின் பயிற்சி பெறும் ஒரு நபருக்கு ஒரு நாள் உணவு செலவுக்காக ஒதுக்கப்பட்டத் தொகை வெறும் ரூ.3.50 பைசா மட்டுமே. இன விடுதலைக்காகப் பயிற்சி பெறும் புலிகள் நல்ல உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக உள்ளூரில் நெல் மூட்டைகளையும், ஆட்டு கிடாக்களையும் திரட்டிக் கொடுத்தவர் அண்ணன் கொளத்தூர் மணி போன்றவர்களே.

1984 தேர்தல் நேரங்களில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்குப் புலிகள் பயிற்சி எடுக்கும் இடத்திற்கு செல்ல பத்து நாட்கள் தாமதமானது, அந்த நேரத்தில் புலிகள் வெறும் கஞ்சி மட்டுமே குடித்து பயிற்சி எடுத்து வந்தார்கள், மிஞ்சிய கஞ்சியில் இருந்த சோற்றை காயவைத்து மீண்டும் கஞ்சி காய்ச்சி குடித்து வந்தனர். பத்து நாட்களுக்குப் பிறகு அண்ணன் கொளத்தூர் மணி அங்கு வந்த போது புலிகள் கஞ்சி குடிப்பதைக் கண்டு மிகவும் மனம் உடைந்து போனார், உடனே புலிகளுக்கு சிறப்பு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார் என்று_ அன்று பயிற்சி முகாம்களுக்கு எல்லாம் பொறுப்பாக இருந்த தளபதி பொன்னம்மான் நினைவு கூர்ந்திருந்தார் ஒரு பேட்டியில்……
இந்த வரலாறு எல்லாம் திடீர் தோன்றிகளுக்குத் தெரிவது கடினமே.

புலிகளுக்கு சோறு போட்டவர்களுக்கும் புலிகள் பெயரைச் சொல்லி சோறு தின்னும் ஜடங்களுக்கும் வேறுபாடு உள்ளது.

யுத்தத்தை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். இந்த உண்மையைப் பொய்யாக்க முயற்சி செய்வது பெரும் துரோகமே!!…

ஈழம் சுதந்திரத்தை சுவாசிக்க எண்ணில் அடங்கா தியாகங்களை செய்த அண்ணன் கொளத்தூர் மணி, ஐயா கோவை- ராமகிருஷ்ணன், ஐயா ஆறுச்சாமி, அப்பா வைகோ போன்றவர்களையும் ஈழத்தமிழர்களையும் பிரிக்க உங்களை போன்ற சதிகாரர்கள் செய்யும் சதிக்கு _ தோல்வி தான் முடிவாக இருக்கும்.

அண்ணன் கொளத்தூர் மணிக்கும் புலிகளுக்குமான உறவு தாய்-சேய்க்கான உறவு என்பதை முன்னாள் போராளிகள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் துயரத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளாத நிலையில்_ நாம் தமிழரின் இது போன்ற இழிச்செயல்கள் இன்னும் ஒரு இனப்படுகொலைக்கு சமம்.

கடுமழை பொழிந்த போதும்…
கார்மேகம் சூழ்ந்த போதும்..
கானகம் கறுத்த போதும்..
கடல் எம்மை வதைத்த போதும்..
கடவுளே கைவிட்ட போதும்..
காவலனாய் நின்ற தலைவர் மேதகுவே பிரபாகரன் அண்ணா என்று அன்போடு அழைத்த அண்ணன் கொளத்தூர் மணி சாக்கடையால் தாக்கப்படுவதை முன்னாள் போராளிகள் கண்டிக்க வேண்டும்.

காட்டுக்குள் தவமிருந்த தம்பிக்காக நாட்டுக்குள் களமாடி களம் பல – பல கண்ட, தமிழ் ஈழத் தாகம் கொண்ட அண்ணன் கொளத்தூர் மணியோடு மூத்த போராளிகளின் வாரிசுகளான நாங்கள் எப்போதும் துணையிருப்போம்.!!!….

சாட்டை (எ) தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது👇.

கருத்ததனில் வேறுபாடு இல்லாத இனம் இல்லை.!. இல்லாத இனம் என்றும் முன்னேறி வாழ்ந்ததில்லை!.
எது இருந்த போதிலும் இக்கட்டு நிலை இதனில் குள்ளநரிக்கூட்டங்கள் ஊடுருவக் காத்திருக்கும்!. ஊடுருவல் எம் இனத்தின் பல்லாண்டு தாகமதை எள்ளளவும் எண்ணாமல் அடியோடு அறுத்தெரியும்!. சிந்தித்து செயல்படுங்கள். சேதமதை தவிர்த்திடுங்கள்..!!…

எங்களளது ஈழக்கனவை சிதைக்க நினைக்கும் இவர்களது கனவு ஒரு நாள் சிதையும்.

நான் உங்கள்
கல்வயல்_வானதி (ஈழம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *