அபிஜித், துருவ் ரத்தி உள்ளிட்டோர் கைது: ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு TNDJU கடும் கண்டனம்!

தேர்தல் ஆணையரைப் பதவி விலகக்கோரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா, டிஜிட்டல் ஊடகவியலாளர் துருவ் ரத்தி உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் (TNDJU) வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய பாஜக அரசு, தன்னை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்குக் காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது! அரசைக் கேள்வி கேட்பதும், அதன் கொள்கைகளை விமர்சிப்பதும், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். இத்தகைய குரல்களைக் கைது நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்துவது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானது.
அபிஜித், துருவ் ரத்தி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் போராடுவதற்கு உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும்.
கேள்வி கேட்பது குற்றமல்ல! கருத்துரிமை அரசின் கருணையல்ல; அது மக்களின் உரிமை!
— தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் (TNDJU)
Comments (...)
You must be logged in to leave a comment.


