வெறி கொண்ட பார்வை
கவியும் போது போது
பெருங் கருணை நுரை பொங்க
வெள்ளம் மெனஓடுகிறது
எதனையாவது நனைத்து விட …
உடல் திமிரால்
மாட்டப்பட்ட கர்வக்கொம்புகளை
தலையிலிருந்து கலட்டி விடுகிறது
காலம் .
சிறு நாய் குட்டியின் கண்களின்
அசைவுகளாய்அன்புணர்ச்சி ஊற
வாலாட்டும் நன்றியாகவே
நான்…
உடல் நலிவுற்றுள்ளது
தத்துவங்களுக்கும்
தாய்ப்பால் கொடுக்கும்
கருணையை எங்கனம் பெற்றேன்
வியப்பு வெளி நீள்கிறது …
உடல் வியர்க்கிறது
கண்கள் உட்பட , உடலே கண்ணீர்
முத்துக்களாய்சிதறி கிடக்கின்றன
உடல் சொர்க்கத்தை சுற்றி
போடப்பட்ட எண்ணற்ற கெட்டிகார
பூட்டுகள் எப்படி உதிர்ந்தது..?
நான்
அல்லாத உலகத்தை
உருவாக்கி பார்த்துவிட்டது உள்ளம்
என் குண்டா சட்டி வாழ்வு
சில அகப்பை சொற்களையாவது
தந்து விட முயல்கிறது.,
உடல் நோயாலும்
சமூக நோயாலும் வாட்டப்படுவது
நல் சந்தர்ப்பம் !!
கருத்து முரண்களை
தாண்டியதாய்மையை
அந்த வாய்ப்புகளே வழங்குகின்றன ..
கண்கள் பனிக்கும்
பெரும் மெளனம் அகத் தேசத்தில்
கலகக் குரல்களும் விடுதலை வேட்கையும்
கொழுந்து விடுகின்றன
முதன் முதலாய்
இப்போது தான் “நாணய”
பயம் !!
பயன்பாட்டு பொருளாகிறது
பண்பாய் இடம் பெயர்கிறது ..

– தவம்
ஒருமுறை அதீத நோய்வாய்பட்ட போது
எழுதியது.
Leave a Reply