தேர் நகர்தல்
சோம்பேரித் தனம் அல்ல
ஊர்கூடி வடம் பிடிக்கிறது
விமான வேகமும்
அவசர குடுக்கை அல்ல
இருக்கை ஜன்னல் ஓரம்
வாய்த்து விட்டாள் விரிகிறது
அண்டவெளி பேருண்மை!!
குறைந்தபட்ச தவறுகளில் தான்
உயிர் இனிக்கிறது
இரைப்பை இருக்கும் வரை
இறை தன்மை வாய்ப்பில்லை
இல்லை போலும்
யானே
இரையாகும் தருணத்தில் தான்
தவறுகளின் நியாய யாத்திரை
துலங்குகிறது!
இணை சேரும்மயக்கத்தில்
உடல் தகனம் தோன்றலாகாது..
தகனங்கள் தருணத்தில்
மயக்க மாயையும் தெரியாது!
தத்துவ சிகரத்தில்
சிலிர்க்கும் போது ஆண் குறிகூட
ஆன்மீகம் விளக்கும் !
புத்தரும் வசித்த
இந்த பூத உடலில்
சிந்தனை நிறுத்தல் நலமல்ல..
தங்க கூண்டில் தங்கிக் கொண்டு
சிறகை விரிப்பதும் சரியல்ல..
அறக்கலகம் என்பது
வேறு ஒன்றுமில்லை
இருத்தல் குறித்த
பிரக்ஞை தான் !!
தவம்

Leave a Reply